Saturday, February 27, 2016

காதல் கண்

காதலுக்கும் கண்கள் உண்டு. அந்தக்
கண்கள் காணும் உலகம் ஒன்று.
காணுகின்ற உலகில் எல்லாம்
காதலித்த ஒன்றே உண்டு.
காதல் என்ற ஒன்றே உண்டு. 

காதல் என்ற ஒன்றில் உண்டாம்
உலகத்திற்கும் உள்ளம் உண்டு.
உள்ளுகின்ற காதல் உவகை
ஊறுகின்ற இதயம் எல்லாம்
விள்ளுகின்ற நாதம் ஒன்று
விளம்புகின்ற கீதம் ஒன்று 

விள்ளுகின்ற நாதம் ஒன்றாய்
இழைகின்ற லயமும் ஒன்று.
லயித்துவிட்ட உள்ளம் என்றும்
காதலிக்கும் கண்கள் உண்டு
கண்கள் சொல்லும் கீதம் ஒன்று.
கண்ணுக்கும் இதயம் உண்டு.
இதயம் காணும் உலகம் ஒன்று.
உலகத்தின் உள்ளம் கண்டு
உவக்கின்ற காதல் ஒன்று
மீட்டுகின்ற கீதம் சென்று
ஊறுகின்ற இதயம் விண்டு
ஒன்றாகும் உயிர்க்குலம்
ஒன்றோடு
ஒன்று. 

***

No comments:

Post a Comment