Saturday, February 27, 2016

காதல் கானல்

காதல் என்பதும் கானல் என்பதும்
கட்டாந்தரை மேல் கனவு
வேட்கையில் விளைந்த புனைவு 

போதம் எழுந்ததும் புலரி பிறந்ததும்
புவியில் விடியும் இரவு - இந்தப்
போதைக்கு ஏது முடிவு? 

பூவிழி மலரப் பொன்மணம் பரவக்
காவதம் கடந்திடும் உறவால்
யார்வதம் நடந்திடும் கரவால்? 

காதல் என்பதும் கானல் என்பதும்
காணும் வரைதான் ஈரம்
கொண்டிட முனைந்தால் மாறும். 

ஊதிவரும் குழல் ஓதிவரும் இதழ்
ஏதெனக் கண்டிடில் காற்றில்
பாதி திறந்த வேய்த் துளையூற்று. 

காதல் என்பதும் கானல் என்பதும்
பேதைமைதான் எனினும்
பாதையில் தெரியும் காட்சி
வேதனையில் அதன் நீட்சி. 

ஆயினும் என்ன ஆனதும் என்ன
ஆதலினால் காதலும் மாட்சி
பேதைமை எனினும்
போதைதான் எனினும்
வேதனையேதான் எனினும்
போதம் எழுந்திடும்
புலரி பிறந்திடும்
பொற்கணம் ஈந்திடும் காதல்
நற்குணம் ஆவதும் காதல். 

***

No comments:

Post a Comment