Friday, February 26, 2016

கலையும் குடும்பம்

கட்டிப் பாதுகாத்த குடும்பம்
கலைகிறது.
வீட்டில் குடிபுகுந்தவரின்
மனைவி பிரசவம்.
முன்னால் இருந்தவரின்
சொந்தம் ஒன்று
கருப்போலையாகிக்
காற்றில் அலைகிறது.
கூட்டிப் பெருக்கிப் போட்டாலும்
காம்பௌண்டை விட்டுத்
தாண்ட மறுக்கிறது.
கூடுகட்டிப் பொறித்த குஞ்சு
ஊஞ்சலுக்காக வைத்த கொக்கியில்
வானை அடைகாக்கச்
சிறகு விரியச் சென்றுவிட்டது.
இருப்பில் உயிர்ப்பும்,
உயிர்ப்பில் இருப்பும்
இருப்பின் இடைகழியாய் இறப்பும்
மாறிமாறிப் பல்லாங்குழி விளையாடும்
இயற்கையின் சோழிகளாய்ப்
பொழுதுகளும் வானும் புவியும்.....
‘சார்! தபால்...!’
யாரோ திரிமூர்த்தியாம்...
இந்த விலாசம் இல்லை....
ம்...எங்கு விட்டேன்?.. 

***

No comments:

Post a Comment