Saturday, February 27, 2016

கவிதையின் தோற்றம்

கவிதை கற்பனையின்
அவசரத்தில் பிறக்கும்
அவசத்தில் பிறக்கும்
பரவசத்தில் பிறக்கும்
பார்க்கும் வசத்தில் பிறக்கும்
ஆர்ப்பில் பிறக்கும்
அடியுள வேர்ப்பில் பிறக்கும்
அலுப்பில் பிறப்பதுமுண்டோ?
பேருந்து ஊர்ந்துவரப்
பார்க்கும் பரிதவிப்பில்
பிறப்பதுமுண்டோ ? 
கவிதையின் வான் திறக்கப்
புவிதைக்கும் பூரிப்பில்
போந்ததொரு பொன்னார் மழையாய்ப்
பாமழையும் பொழிந்திடலாம்
அன்றேல்
வாசல் கடந்து வாராது வசந்தமெனில்
நேசமும் மலராதோ?
நெஞ்சும் களராமோ?

***

No comments:

Post a Comment