கூறாமல் கூறும் திறமறிவார் கூற்றுவர்க்கே
மாறா விடையளித்தார் மன்னுசிவ னென்றிடுவார்
யாரானும் கற்கயிவண் யோசித்தா லிவ்விடத்தில்
பேராமல் நின்றதுதான் பீடிக்கும் சாவொன்றே
போதாக் குறையினுக்கே பொல்லாங்கும் புன்மைக்கு
வாதாடி நிற்கின்ற வஞ்சனையும் வாய்மை
கரந்திட்ட வன்குணமும் காரிருளாய் நெஞ்சும்
புரக்கின்ற பொன்னங் கழலறியா நாட்டில்
அரைக்கசைத்த கோமகனார் ஆடுபல்லக் காடிப்
புரைமலிந்த வாழ்க்கையினில் பொன்றாப் பவிசினிலே
உத்தமர்தாம் உள்ளம் கருகிடவே ஊர்கோடிப்
பித்தர்தம் முன்னே பிரதோஷ வேளையிலே
எத்தர்கள் நிற்கின்ற ஏற்றத்தைக் கண்டுகந்தே
எத்திக்கும் எக்காளம் ஊதிப் புறப்பட்டார்
முத்திக்கு மூல முழுமுதலாய் முன்வந்தார்
பத்திக்கும் என்னோ பொருள்.
***
No comments:
Post a Comment