Friday, February 26, 2016

அரிச்சுவடி

நீங்கள் சொன்ன
இந்த வார்த்தைகளுக்காக
என்றோ எனக்கு
அரிச்சுவடி போதித்த
திருவுக்கு நமஸ்காரம் 
இன்று சொன்ன சொற்களில்
அன்றெல்லாம் கற்பித்த
அருள் உருக்கள்
அம்மா அப்பா வாத்தியார் இவர்களின்
ஆற்றாத கோபத்திற்கு
அதீத பொறுமைக்கு
அன்பின் நீட்சியாய்
ஆடிய பிரம்பிற்குப்
பண்பின் வனைவாய்க்
குட்டிய விரலுக்கு
மொழிக்குதிரை ஒருவழியாக
என்னைப் புறந்தள்ளாது சுமந்தபோது
பொழிந்த பாசத்திற்கு
ஒழிவில்லா ஒருநன்றி
உள்ளத்தின் உருவாரமாய் நீளும். 

***

No comments:

Post a Comment