Friday, February 26, 2016

துயில்

காலையில்
கடைசிச் சொட்டு
தூக்கத்திற்கு விலை இல்லை.
இலவசமாக வருவது
முன்னிரவுத் தீர்மானங்கள்.
அலுவலகத்...
தின்....போக்குவரத்...
தின்....அவசரக்..
கைகள்
ஆழ்ந்த தூக்கத்தினுள்ளும்
புகுந்து இழுக்கின்றன.
அறிதுயில் கூடத்
தேவையில்லை.
அவசரமற்ற துயில் போதும். 

***

No comments:

Post a Comment