மனிதம் முழுதும்
கடவுள் முழுதும்
கலந்த வியப்பே அவதாரமோ?
மானிடம் வாழும்
மகத்துவம் என்றும்
மண்ணில் வந்த
தெய்விகம் என்றும்
மயக்கும் இயல்பே அவதாரமோ?
என்னில் ஒன்றும்
உன்னில் என்றும்
என்னைக் கரைத்த வெளிப்பாடோ?
எண்ணில் கலந்து
ஏக்கம் புலர்ந்த
கண்ணின் விடியல் என்பேனோ?
விண்ணை ஈன்ற
மண்ணின் தாய்மை
மண்ணில் விளைந்த
விண்ணின் சேய்மை
உண்ணின்றுலாவும்
அருளின் அண்மை.
***
No comments:
Post a Comment