நூல் கக்கி நூல் கக்கி
நுவலரும் பொருள் கக்கி
மூலைக்கு மூலை நக்கிப்
பின்னி வைத்த மொழிவலையுள்
தன்னைப் போல் விழுகின்ற பூச்சிகளும்
உன்னித்து அவையிற்றைத்
தன்னாக்கும் சிலந்திகளும்
சிலந்திகளும் பூச்சிகளும்
அவ்வளவுதான் மனித மன
இயக்கத்தின் சரித்திரமோ!
பூச்சிக்குப் பூச்சி பிணங்குவதும்
தான் விழுந்த வலையின்
மகத்துவத்தைச் செப்புவதும்
புறவலைகள் பொன்றுவலை
என்று நிறுவுவதும்
வலைக்கு வலை எல்லை மீறல்
சிலந்தி படும் தொல்லை
அறுந்தவலை ஒட்டிப்
பூச்சிகளின் புழக்கமும்
காற்றின் புழுக்கமும்
உள்ள இடமாகப் பார்த்துக் கட்டித்...
தன்னைப் போல் விழுகின்ற பூச்சிகளும்
உன்னிப்பாய் இருக்கின்ற சிலந்திகளும்
சிலந்திகளும் பூச்சிகளும்
இத்தனைதானா ஓய்?
மனித குல சரித்திரமும்?
குட்டிச் சுவராய்ப் போயிற்று!
*
No comments:
Post a Comment