எங்கென்று தேடித்தான் கண்ணை மூடுகிறேன்;
ஆனால் வெளியில் எங்கோ உன் குரல் கேட்கிறது.
வெளியில், வானில்,
விரிந்த அண்டப் பரப்பின்
விளிம்பிற்கப்பால் உன்னைத் தேடிச் செல்கிறேன்.
உள்ளத்துக் குள்ளிருந்து உன்குரல் கேட்கிறது;
நேற்று, நேற்றுக்குமுன் என்று
கடந்த காலம் எல்லாம் தேடி,
எதிர்காலச் சந்தில் வந்து நிற்கிறேன்;
எங்கும் உன் காலடித் தடங்கள்.
தடம் ஒற்றித் தொடரும் திறலில் தேடுகிறேன்;
நிகழ்காலத் தேட்டத்தின் நிழலாய் நீளும் பழமை;
பழமைதான் உன்கோயில் என்று
விளிம்பிற்கப்பால் உன்னைத் தேடிச் செல்கிறேன்.
உள்ளத்துக் குள்ளிருந்து உன்குரல் கேட்கிறது;
நேற்று, நேற்றுக்குமுன் என்று
கடந்த காலம் எல்லாம் தேடி,
எதிர்காலச் சந்தில் வந்து நிற்கிறேன்;
எங்கும் உன் காலடித் தடங்கள்.
தடம் ஒற்றித் தொடரும் திறலில் தேடுகிறேன்;
நிகழ்காலத் தேட்டத்தின் நிழலாய் நீளும் பழமை;
பழமைதான் உன்கோயில் என்று
விரதம் காத்து வந்து நின்றேன்;
புதுமைக்குள் புதுமையாய்ப்
புதுமைக்குள் புதுமையாய்ப்
புறப்பட்டுப் போனாய்;
புதுமைக்குள் முகிழ்க்கும் உன் பிரஸன்னம்
புதுமைக்குள் முகிழ்க்கும் உன் பிரஸன்னம்
என்று பொறுமை காத்தேன்;
என்றோ நீ வந்து சேர்ந்துவிட்ட செய்தி
என்றோ நீ வந்து சேர்ந்துவிட்ட செய்தி
உரைத்து வந்தது காலம்.
தேடிக் களைத்தயர்ந்தேன்;
தூங்குங்கால் எனை மடிமீது கிடத்தித்
தேடிக் களைத்தயர்ந்தேன்;
தூங்குங்கால் எனை மடிமீது கிடத்தித்
தலைகோதி விட்டதாய்க்
கதைத்தன பஞ்சபூதங்கள்;
இருக்கின்றாய் என்று தேடி வந்தேன்;
இல்லையென நிரூபித்துச் சென்றாய்;
இல்லை என நிம்மதியாய்த் திரிந்தேன்;
இருக்கும் தடம் காட்டி
கதைத்தன பஞ்சபூதங்கள்;
இருக்கின்றாய் என்று தேடி வந்தேன்;
இல்லையென நிரூபித்துச் சென்றாய்;
இல்லை என நிம்மதியாய்த் திரிந்தேன்;
இருக்கும் தடம் காட்டி
என்னை வளைத்துக்கொண்டாய்;
உன் இன்பத்துக்குப் பொருளாக எண்ணி
எனை உவந்தேன்;
உன் லீலைக்குப் பொருளாக ஆக்கி
எனை மகிழ்ந்தாய்;
உன் கையில் குழலாக ஆகிக் கீதம் இசைத்தேன்;
அதன் அடியோடும் ஆதாரச் சுருதியாக
***
உன் இன்பத்துக்குப் பொருளாக எண்ணி
எனை உவந்தேன்;
உன் லீலைக்குப் பொருளாக ஆக்கி
எனை மகிழ்ந்தாய்;
உன் கையில் குழலாக ஆகிக் கீதம் இசைத்தேன்;
அதன் அடியோடும் ஆதாரச் சுருதியாக
என் அகங்காரம் ஆக்கிச் சிரித்தாய்;
என்னில் நான் உட்சிறையாகி
என்னில் நான் உட்சிறையாகி
மடிந்தேன் என விழுந்தேன்;
உன்னில் நீ என்னை ஏற்று
உன்னில் நீ என்னை ஏற்று
உயிர்க் குயிராய் எழுந்தாய்;
கண்ணில் நீ உன்னைக் காட்டாமல் சென்றாய்;
காணும் வேட்கையில் நானும் கருத்திழந்தேன்;
முடிவாக ஒன்றைச் சொல்லிப்போ முழுமுதலே!
நம்மிலிருந்து நாம் ஒருவரை ஒருவர்
நழுவித்தான் போமோ காலம்?
நேர்கொடு நேர் சந்தித்தால்
நில்லாது போமோ வையம்?
நான் என்பது உதித்த இடத்தே
ஒடுங்கிப் போனால்
ஏன் என்பது தெரிய வருமோ
உணர்வின் மூர்த்தி!
கண்ணில் நீ உன்னைக் காட்டாமல் சென்றாய்;
காணும் வேட்கையில் நானும் கருத்திழந்தேன்;
முடிவாக ஒன்றைச் சொல்லிப்போ முழுமுதலே!
நம்மிலிருந்து நாம் ஒருவரை ஒருவர்
நழுவித்தான் போமோ காலம்?
நேர்கொடு நேர் சந்தித்தால்
நில்லாது போமோ வையம்?
நான் என்பது உதித்த இடத்தே
ஒடுங்கிப் போனால்
ஏன் என்பது தெரிய வருமோ
உணர்வின் மூர்த்தி!
***
No comments:
Post a Comment