Friday, February 26, 2016

எதையோ...

எதையோ நோண்டும் பொழுது...
எதுவோ கிடைக்கிறது.
என்றோ எழுதி ஏன் எறிந்தேன்?
நினைவில்லை.
ஆனால் இன்று கையில் மாட்டிச் சிரிக்கிறது. 
இனியும் எறிந்து விடுவேனோ என்ற பயம்.
எதற்கும் இருக்கட்டும் என்று ... 
இன்று பதவிசாய் இருக்கும் இந்த வார்த்தைகள்
என்றோ என் உணர்ச்சிகளில் வேர் கொண்டன போலும்
இருக்கட்டும் போட்டு வைப்போம்
என்றேனும் உதவக் கூடும்
எனக்கே. 

***

No comments:

Post a Comment