என்றோ பட்ட வேதனையில்
ஏமாற்றத்தில் இறுகிப்போன நுண்மைகள்
இயல்புக்குள் கால்பெயர்க்க
இன்றும் வெறுக்கிறது.
அன்றுன்னைக் கண்டதும் அகமலர
ஆர்வப் புலரி எழுந்ததுதான் மிச்சம்
அதற்குப்பின் எல்லாம் மூட்டம்.
இறுக்கத்தின் சலனமின்மை
நின்று பெயும் துயர்க்கு
நரம்பில் நெறிகட்டியது
என்றென்றும் மாறாத இலக்கணத்தின் அமைதி
வென்ற கணம் எங்கோ
நினைவின் விறைப்புகளில் தொலைந்திருக்கவேண்டும்.
அம்பில் விடுபட்ட நாண்
வில்லின் விரலிடுக்கில் வேண்டும் ஓய்வால்
உச்சி நனவின் உறங்கு பகல் தோயும்
நினைவில் நிழலாட நீராட்டயரும்
நின்று சலிக்கும் நான்
அகழ்ந்த உளத்தில் அமிழும் பரிதி.
***
No comments:
Post a Comment