Friday, February 26, 2016

வானும் சிப்பியும்

வானம் -- 

வாரி இறைத்தேன்
எங்கும் தெளித்தேன்
வெய்யோன் காய
வாங்கி குவித்தேன்
விழுந்த ஒரு துளி
விந்தை முத்தாய்
வனைந்த நீ ஒரு
வியப்பே சிப்பி! 

சிப்பி -- 

விழுந்த ஒரு துளி
ஒளித்தேன் என்று
வாங்கிய உயிரின்
விலை சொல் வானே! 

***

No comments:

Post a Comment