காலங்காத்தால
அலுவலக மேசையருகே
தரையில்
அடித்துவிடு என்றால்
அய்யோ பாவம் என்கிறான் ப்யூன்
இலக்குமியின் கடைக்கண்
என்று அவன் கவலை;
ஏறினால் அருவருப்பு
என்று என் மனநிலை;
இலக்குமியின் கடைக்கண்
எங்கும் திரிந்து
எங்கோ ஒரு மூலை இடுக்கில்
ஒன்றியது போலும்
யாருமே அடிக்கவில்லை.
***
No comments:
Post a Comment