Friday, February 26, 2016

யாரைப் போல் யார்

அவனைப் போல் இரு;
இவனைப் போல் இரு;
உவனைப் போல் இரு;
எவனைப் போலாவது
நானிருக்க வேண்டுமென்றால்
என்னைப் போல் யாரிருப்பது?
என்னைப் போல் நானிருந்தால்
போதும் என்றால்
ஏற்கனவே இருக்கும் என்னை
ஏன் மறுபடியும் இருப்பது?
இருக்கும் நான்
மீண்டும் இருக்க
எங்கேதான் இருப்பது?
’சார்! உங்க டோக்கன் எண் என்ன?’ 

***

No comments:

Post a Comment